
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த ஒரு 28 வயது பெண் டாக்டர் காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார். அதாவது ஐபிஎஸ் அதிகாரி தர்ஷன் துகாட் (30) என்பவர் தன்னை பலாத்காரம் செய்து விட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் டாக்டர் கொடுத்த புகாரில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2022 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலமாக தர்ஷன் பழக்கமானார்.
அந்த சமயத்தில் பெண் எம்பிபிஎஸ் படித்து வந்த நிலையில் தர்ஷன் ஐஏஎஸ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இருவரும் செல்போன் நம்பர்களை பறிமாறி பழகி வந்த நிலையில் பின்னர் காதலிக்க தொடங்கினார். இதைத் தொடர்ந்து அவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்கு கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அவர் பல இடங்களுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த நிலையில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றதும் அந்த பெண்ணை கழட்டிவிட்டார். பின்னர் அந்த பெண்ணின் ஜாதியை காரணம் காட்டி திருமணம் செய்ய முடியாது என்று அவர் கூறிய நிலையில் தர்ஷன் குடும்பமும் முறையான பதில் கொடுக்கவில்லை.
இதனால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் தற்போது ஐஏஎஸ் அதிகாரியின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.