
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஒரு மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது திடீரென ஈஷா அபிதா(15) என்ற மாணவி மயங்கி விழுந்தார். இதனை பார்த்து வகுப்பறையில் இருந்த மற்ற மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர் சிறிது நேரத்தில் சக ஆசிரியர்கள் அந்த மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இதய குறைபாடு காரணமாக மாணவி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.