தீபாவளி பண்டிகை கடந்த 31ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் தீபாவளி பண்டிகையை வெவ்வேறு விதமாக கொண்டாடுவார்கள். அந்த வகையில் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் பிதத்வாத் கிராமத்தில் தீபாவளியை முன்னிட்டு ஒரு வினோதமான சடங்கு நடைபெறுகிறது.

அதாவது அந்த கிராம மக்கள் படுத்துக்கொண்டு பசுக்களை தங்கள் மீது ஏறி நடக்க விடுகிறார்கள். இந்த பண்டிகையை தீபாவளிக்கு மறுநாள் அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதாவது தெருவில் அந்த கிராம மக்கள் வரிசையாக படுத்துக் கொள்வார்கள். அவர்கள் மீது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை நடக்க விடுவார்கள். மேலும் இது கோவர்தன பூஜை என்று அழைக்கப்படும் நிலையில் இந்த சடங்கில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கிறார்கள்.