
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாணார்பட்டி பகுதியில் கட்டில் உடைந்ததில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோபிகாந்தன் (35) என்பவர் தன் குடும்பத்துடன் அந்த பகுதியில் வசித்து வரும் நிலையில் இரும்பு கட்டிலில் தன் மகன் கார்த்திக்குடன் (10) படுத்திருந்தார்.
அப்போது கட்டிலில் போல்ட்டுகள் சரியாக இல்லாததால் கட்டிலின் ஒரு பக்க கால் திடீரென உடைந்தது. அப்போது கட்டிலில் படுத்திருந்தவர்களின் கழுத்தை இரும்பு கம்பி நெரித்தது. இதில் தந்தை மகன் இருவரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.