இந்தோனேசியாவின் டோராஜன் இனக்குழு, மரணத்தை ஒரு வழிகாட்டியாக கருதும் மிகவும் ஆச்சரியமூட்டும் சமூகமாகும். சுமத்ரா, ஜாவா, சுலவேசி போன்ற பல தீவுகளை இணைத்து உருவான இந்தோனேசியா, 30 கோடிக்கும் மேற்பட்ட மக்களை கொண்டுள்ளது. அதில் ஒரு சிறப்பான இனக்குழுவாகும் டோராஜன் சமூகத்தைப் பற்றிய தகவல்கள் வெளியானது.

டோராஜன் சமூகத்தில் உயிரிழந்தவர்கள் மீதான அணுகுமுறை முற்றிலும் வித்தியாசமானது. உடல் இறந்துவிட்டாலும் ஆன்மா உயிரோடு இருப்பதாக அவர்கள் நம்புகின்றனர். இதனால், உயிரிழந்தவர்களின் உடல்களை பாக்டீரியாவில் இருந்து பாதுகாப்பதற்காக பார்மால்டிஹைட் போன்ற வேதிப்பொருட்களை பயன்படுத்துகின்றனர்.

இறந்தவர்களின் உடல்கள் ஒப்பனை செய்யப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருடன் தங்க வைக்கப்படும். இவ்வாறு பாதுகாக்கப்படும் உடல்களுக்கு உணவும் தண்ணீரும் வழங்கப்படுவது டோராஜன் சமூகத்தில் சாதாரணமாகப் பார்க்கப்படும் நிகழ்வாகும். உடல்களை தீவிரமாகப் பாதுகாக்கின்றனர். அப்படி செய்தால் தங்களுக்கு அதிர்ஷ்டம் ஏற்படும் என்றும் டோராஜன் மக்கள் நம்புகின்றனர்.