காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் ரித்தீஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் ரித்தீஷ், குலசேகரன் உட்பட மூன்று பேர் ஆட்டோ ஓட்டி வந்தனர். அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி நர்சிங் படித்து வருகிறார். சிறுமிக்கும் மூன்று பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி மூன்று பேரும் சிறுமியை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் சிறுமி கர்ப்பமானார். இதுகுறித்து சிறுமியின் தாய் தனது மகளிடம் கேட்ட போது உண்மை சம்பவம் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ரித்தீஷ் உட்பட இரண்டு பேரை கைது செய்தனர்.