சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் எதிரான  லீக் போட்டியில் பாகிஸ்தான் பேட்டர் சௌத் ஷகீல் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். இருந்தாலும் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் முதல் தர கிரிக்கெட் தொடரில் அவர் விளையாடி வருகிறார். இந்த தொடரில் தற்போது பாகிஸ்தான் தொலைக்காட்சி அணியும், ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணியும் மோதி வருகிறது. இதில் ஸ்டேட் பாங்க் அணியில் தான்  பேட்டர் சௌத் ஷகீல்  இடம் பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் முதலில்  களம் இறங்கிய ஸ்டேட் பேங்க் ஆப் பாகிஸ்தான் அணியானது ஒரு கட்டத்தில் 128/1 என இருந்த நிலையில் திடீரென்று அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. ஆனால் அணி நல்ல நிலைமையில் இருந்தபோது பெவிலியலில் நன்கு அயர்ந்து தூங்கி உள்ளார் சௌத் ஷகீல். அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது அவருக்கு தெரியாது.

ஐந்தாவது விக்கெட்டாக  இவர் களமிறங்கும் நிலை ஏற்பட்டது. இதனால், 4ஆவது விக்கெட் விழுந்த உடனே, ஷகீலை பெலிவியனில் அமர்ந்திருந்த சக வீரர்கள் கூப்பிட்டத்தும் உடனே விழித்துப் பார்த்த அவர் பேட்டிங் செய்ய ஆயத்தமாகி இருக்கிறார். ஆனால் மூன்று நிமிடங்களுக்குள் களம் இறங்கவில்லை என்றதால் டைம் அவுட் முறைப்படி அவுட் ஆகி உள்ளார் .இதனால்  ஷகீலை தகுதி நீக்கம் செய்து விட்டார்கள்.