இயக்குனர்கள் கங்கை அமரனின் இளைய மகன் தான் பிரேம்ஜி. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கலக்கி வருகின்றார். தற்போது சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்துள்ளார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக திருமணம் செய்யாமல் தனிமையில் இருந்த பிரேம்ஜி அண்மையில் இந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு தன்னுடைய ஆசை மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை அவர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி பிரேம்ஜி மற்றும் இந்து திருமண முடிந்து ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் அதற்கு மனைவிக்கு வாழ்த்து கூறி பதிவு ஒன்றை பிரேம்ஜி பகிர்ந்துள்ளார். அதில் திருமணம் ஆகி ஒரு மாதம் அதற்குள் ஆகிவிட்டது பேபி என்று குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த இணையவாசிகள் அதுக்குள்ளயா என அதிர்ச்சியில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Indhu PM இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@indhu.premgi)