
நடிகர் விஜயின் லியோ திரைப்படம் இன்று வெளியாகிறது. இதற்கிடையில் பத்திலிருந்து இதுவரை மூன்று பாடல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. இதில் முதலில் வெளியான “நான் ரெடி தான்” பாடல் சாதனை படைக்கும் அளவிற்கு வைரலாகி வருகின்றது. பலரும் இதற்கு டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கௌதம் மேனன் பப்ளிக்காக இளம் பெண்ணுடன் “ நா ரெடி தான்..” பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் நம்ம இயக்குனர் கவுதம் மேனனா இது என இணையவாசிகள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
https://twitter.com/i/status/1713957541242118217