
அதிமுக கட்சியில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உட்கட்சி பூசல்கள் ஏற்பட்ட நிலையில் நான்கு வருட ஆட்சியை ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இணைந்து நடத்திய நிலையில் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது விரிசல் வெளிப்படையாகவே தெரிந்தது. பின்னர் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் இரட்டை இலை சின்னம் ஓபிஎஸ் தரப்பு எங்களுக்கு தான் சொந்தம் என்றும் இபிஎஸ் தரப்பு எங்களுக்கு தான் சொந்தம் என்றும் கூறி நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையங்களில் வழக்கு தொடர்ந்துள்ளது. ஆனால் பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதால் அவருக்கு தான் இரட்டை இலையின் சின்னம் சொந்தம் என கூறப்பட்டது.
இந்நிலையில் இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ள நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி இறுதிக்கட்ட விசாரணை தொடங்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று இரட்டை இலை சின்னம் தொடர்பாக புகார் கொடுத்து அனைவரையும் விசாரணைக்கு அழைக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மேலும் அவர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.