
தஞ்சாவூர் மாவட்டம் வெண்ணாற்றங்கரையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் ஆன்லைன் வர்த்தக வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி மெசேஜ் வந்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அந்த பெண் பல்வேறு தவணைகளில் எதிர்த் தரப்பினர் குறிப்பிட்ட அனுப்பிய வங்கி கணக்குக்கு ரூ.8 லட்சத்து 56 ஆயிரத்து 146 அனுப்பி உள்ளார். அதன் பின் அவர்களிடம் இருந்து எந்த விதமான பரிவர்த்தனையும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் திருவையாறு அருகே கண்டியூரை சேர்ந்த ஒருவருடைய செல்போனுக்கு கடன் வழங்கப்படும் என குறிப்பிட்டு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இதனை நம்பி அவர் குறுஞ்செய்தி வந்த செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர் தரப்பில் பேசியவர் கணக்கு எண்ணுக்கு இவர் பல்வேறு காரணங்களுக்காக ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 500 ரூபாய் அனுப்பியுள்ளார். அதன் பின் எதிர்முனையில் பேசியவர் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதால் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பெயரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.