
இரவு நேரத்தில் நகங்களை வெட்டக்கூடாது என்று அனைவரும் கூறுவார்கள். இதற்குப் பின்னால் ஆன்மீகக் காரணமும் உள்ளது அதனைப் போலவே அறிவியல் காரணமும் உள்ளது. ஆன்மீக படி மாலை நேரங்களில் லட்சுமிதேவி வீட்டில் வருவார் என்பதால் நகம் வெட்டக்கூடாது என்று கூறுவார்கள். அறிவியல் படி பார்த்தால் சுகாதாரத்தை பேணுதல் மிக முக்கியமாகும்.
முந்தைய காலத்தில் மின்சாரம் இல்லை கத்தியால்தான் நகத்தை வெட்டுவார்கள். அவ்வாறு வெட்டும் போது காயங்கள் ஏற்படும் என்பதற்காக நகத்தை வெட்ட வேண்டாம் என்று பழக்கப்படுத்தினர். அதே சமயம் வெளிச்சம் இல்லாத நேரத்தில் நகம் வெட்டும்போது அது உணவில் விழ வாய்ப்புள்ளது. இதனால் வயிற்றுப்போக்கு மற்றும் பாரிய உபாதைகள் ஏற்படும் என அறிவியல் மூலமாக கூறப்படுகிறது.