மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 6 வயது சிறுமி தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த சிறுமியின் தாய் மற்றும் பாட்டி சம்பவ நாளில் இரவு நேரத்தில் வெயிலின் தாக்கம் காரணமாக கதவை திறந்து வைத்து கொண்டே தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு ஒரு மணி அளவில் வீட்டிற்குள் ஒரு மர்மநகர் புகுந்து அவர் சிறுமியை தூக்கிக்கொண்டு சென்று விட்டார்.

உடனே சிறுமியின் தாய் மற்றும் பாட்டி விழித்த நிலையில் அவர்கள் பயத்தில் அலறிக்கொண்டே சிறுமியை தேடி சென்றனர். அப்போது சிறுமி முதுகில் காயங்களுடன் கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக சிறுமியை மீட்டு விசாரித்த போது பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் மயிலாடுதுறை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து மறுமணவரை வலைவீசி தேடி வருகின்றனர்.