சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி பகுதி நேரமாக தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ஆம் தேதி வேலை முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக தனது தோழியுடன் வடபழனி வெள்ளாளர் தெருவில் நடந்து சென்றார். அப்போது மது போதையில் வந்த ஒருவர் இரண்டு பேரையும் வழிமறித்து அவதூறாக பேசி உள்ளார். மேலும் மாணவியையும் அவரது தோழியையும் கன்னத்தில் அறைந்து கீழே தள்ளிவிட்டு தப்பி சென்றார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் வடபழனி கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்த தாஸ் என்பவர் மாணவியிடம் தகராறு செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.