
மதுரையில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி தங்க செயினை பறிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். மதுரை அவனியாபுரம் பகுதியில் கோபிநாத் – சத்யாவதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். சத்யாவதி இரவு வீட்டில் தனியாக இருந்தபோது இரண்டு இளைஞர்கள் ஆயுதங்களுடன் வீட்டிற்கு புகுந்து தாலி செயினை பறிக்க முயற்சித்தனர். அதனை சத்யாவதி தடுக்க முற்பட்டபோது கையில் கத்தியால் வெட்டினர்.
சத்யாவதியின் கூச்சலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்ததும் இருவரும் தப்பி ஓடி உள்ளனர். தாக்குதலில் காயமடைந்த சத்யாவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அதன் அடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த கருவாயன், முத்துக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.