
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு வீரமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சங்கீதா என்ற மகள் இருக்கிறார். இவருக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்று நிலையில் தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தை பிறந்து 38 நாட்கள் ஆகிறது. இந்த குழந்தையை இரவு நேரத்தில் யாரோ துணியை வைத்து முழுவதுமாக சுற்றி உள்ளனர்.
பின்னர் குளியல் அறையில் உள்ள தண்ணீர் வாளியில் போட்டுவிட்டனர். இதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இரவு நேரத்தில் குழந்தையின் தாத்தா குழந்தையை தேடிப் பார்த்துள்ளார். அப்போது குழந்தையை காணாததால் வீட்டில் உள்ள அனைவரும் தேடினர். அப்போது குளியலறையில் உள்ள வாளியில் குழந்தை சடலமாக கிடந்தது தெரியவந்தது. இதைப் பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். இது தொடர்பாக வீரமுத்து, அவருடைய மனைவி ரேவதி மற்றும் குழந்தையின் பெரியம்மா அனுசியா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.