
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். இந்த இளம்பெண் ஒரு அழகு கலை நிலையத்தில் பயிற்சி எடுத்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் பயிற்சி முடிந்த பிறகு இரவு 8 மணி அளவில் தன்னுடைய வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் பைக்கில் வந்து அந்த இளம் பெண்ணை பின் தொடர்ந்தார். அவர் திடீரென இளம்பெண் மீது மோதுவது போல் சென்றதால் அவர் சாலையை விட்டு விலகி கீழே இறங்கி நடந்து சென்றார். பின்னர் அந்த வாலிபர் அந்த இளம் பெண்ணிடம் பேச முயற்சித்த நிலையில் அவர் பேசாததால் கோபத்தில் இளம்பெண்ணை தொட்டு சில்மிஷம் செய்தார்.
இதனால் அந்த இளம் பெண் கத்தி கூச்சலிடவே அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் அந்த வாலிபர் பைக்கில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். பாதிக்கப்பட்ட இளம் பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் சரத்குமார் (32) என்பவர் இளம்பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அவரை கைது செய்து காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.