
நேற்று இரவு இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தெரிவித்துள்ளார். இவர், கடந்த தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி வைத்ததால், அக்கட்சியில் இருந்து விலகி, ஒரே நாளில் புதிய கட்சியை ஆரம்பித்து, சுயேச்சையாக போட்டியிட்டவர். ஆனால், அவரே தற்போது அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்தது பேசுபொருளாக மாறியுள்ளது.
