பஞ்சாப் மாநிலத்தில் சிர்கிந்த் ரயில்வே நிலையம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3:45 மணி அளவில் இரு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது‌ 2 லோகோ பைலட்டுகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் மற்றும் ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.