
விராட் கோலி புலி போல பாய்ந்து கேட்ச் எடுத்து சாதனையை பதிவு செய்தார்..
இந்தியாவின் ஒருநாள் உலகக் கோப்பை பயணம் இன்று தொடங்குகிறது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக் மைதானத்தில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. டெங்கு காரணமாக சுப்மன் கில் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்காததால் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினர்.
இதில் முதல் 2 ஓவர்களில் எச்சரிக்கையுடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணிக்கு, 3வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா அதிர்ச்சி அளித்தார். பும்ராவின் 2வது பந்து மார்ஷின் பேட்டில் பட்டு எட்ஜ் ஆகி பின்னால் சென்றது. அதனை விராட் கோலி புலி இரையை பாய்ந்து கவ்வி பிடிப்பது போல பாய்ந்து பிடித்தார். முதல் ஸ்லிப்பில் மிட்செல் மார்ஷ் (0) விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விராட் கோலி கேட்ச் பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதேசமயம் விராட் கோலி ஒரு சாதனையையும் படைத்துள்ளார். ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய வீரர் (விக்கெட் கீப்பர் தவிர்த்து) அதிக 15 கேட்சுகளை ஸ்லிப்பில் நின்று எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். அனில் கும்ப்ளேவின் 14 கேட்சுகள் சாதனையை முறியடித்தார். மேலும் கபில் தேவ் மற்றும் சச்சின் ஆகியோர் 12 கேட்ச்களுடன் அடுத்தடுத்து உள்ளனர்.
https://twitter.com/Irfan_pth4n/status/1710948183738921040
Excellent catch by Virat Kohli. One of the best fielder ever
Fitness freak they said, very well said. 🥵🔥#INDvsAUS#ViratKohli𓃵https://t.co/ow8SuIm4Ix— KRISHNA (@KrishnaVK_18) October 8, 2023
It suits perfect on Virat Kohli 👑#INDvsAUS #ViratKohli𓃵 pic.twitter.com/e7UTnZL1YF
— VIRANSHH. (@VIRANSHHVK18) October 8, 2023