தஞ்சை அம்மாபேட்டை அருகில் கீழ கோவில்பத்து கிராமத்தில் ஆதிதிராவிடர் தெருவில் வசித்து வந்த சீனிவாசன்(53) நேற்று அதிகாலை உயிரிழந்துள்ளார். இதனால் வடபாதி கிராமத்திலுள்ள ஆதி திராவிடர் தெரு வழியே நேற்று மாலை இறந்த சீனிவாசன் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று உள்ளனர். அப்போது வடபாதி ஆதி திராவிடர் தெருவினர் திருமண வரவேற்பு விழா நடப்பதால் வேறு வழியாக செல்லுமாறு கூறினர்.

எனினும் சீனிவாசன் உடலை அந்த தெரு வழியாக தான் எடுத்து செல்வோம் எனக் கூறி, சீனிவாசன் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அதன்பின் உடலை அவ்வழியாக கொண்டு போககூடாது என சொல்லி ஒரு தரப்பினர் டாடா ஏசி வாகனத்தை போட்டு ரோட்டை மறித்து உள்ளனர். இதன் காரணமாக  கோபமடைந்த சீனிவாசன் உறவினர்களுக்கும், கீழ கோவில்பத்து ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

அதனை தொடர்ந்து இருதரப்பினரும் கற்களையும், கட்டையையும் வீசி ஒருவருக்கு ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் கிராமம் கலவரமாக மாறியதால் போலீஸ் அதிவிரைவுப்படையினர் நுாற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு குவிக்கப்பட்டனர். பின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில், கீழகோவில்பத்து ஆதிதிராவிடர் தெரு வழியே சீனிவாசன் உடலை போலீஸ் பாதுகாப்புடன் அவரது உறவினர்கள் எடுத்து சென்று தகனம் செய்தனர்.