சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பாலகிருஷ்ணன்-ராக்கு தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடைய ஒரே மகள் பாண்டிச்செல்வி கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த சிறுமிக்கு 8 வயது இருக்கும் போது உடல் நலக்குறைவினால் இறந்துவிட்டார். இந்நிலையில் இறந்து போன சிறுமிக்கு அலங்காரம் செய்து கொள்வது என்றால் மிகவும் பிடிக்குமாம். இதனால் அவருடைய தாயார் ராக்கு தன்மகள் தற்போது உயிருடன் இருந்தால் அவளுக்கு 11 வயது இருக்கும் என்பதால் பூப் புனித நீராட்டு விழா நடத்த முடிவு செய்துள்ளார்.

அதன்படி பாண்டி செல்விக்கு நகைகள் மற்றும் மாலை அணிந்தது போன்று கட்டவுட் தயார் செய்து பூப்புனித விழாவுக்கு ஏற்பாடு செய்தார். இந்த விழாவை அவர் அன்னையர் தினத்தன்று நடத்த முடிவு செய்திருந்த நிலையில் அன்று மண்டபம் கிடைக்காததால் மறுநாள் நடத்தினார். இந்த விழாவில் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் என பலர் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கு விருந்து சாப்பிட்டதுடன் மொய் எழுதியும் சென்றனர். மேலும் இறந்து போன மகளுக்கு ஒரு தாய் பூப்புனித நீராட்டு விழா நடத்தியது அப்பகுதியில் நெகூழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..