திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் கணேசன். 80 வயதாகும் இவர் உடல்நலம் என்று இருந்த நிலையில் இவரை அவருடைய மனைவி கண்ணம்மாள் (70) உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் கணேசன் உயிரிழந்த நிலையில் அதனை அருகில் இருந்து பார்த்த மனைவி கண்ணம்மாள் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து அவரும் உயிரிழந்தார். இறப்பிலும் இணைபிரியா இந்த தம்பதியை கண்டு அப்பகுதி மக்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.