இலங்கையில் 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்தவர் தம்மிகா நிரோஷனா. இவர் கடந்த சனிக்கிழமை தன்னுடைய வீட்டில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ‌ அவர்களுடைய கண் முன்னே சுட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த கொலையை செய்தவர்கள் யார்? அதற்கான காரணம் என்ன என்று இதுவரை தெரியவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் இந்த சம்பவம் இலங்கை நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.