
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி ஜெசிகா புர்கோ தன்னுடைய உடல் அழகுக்காக பலவகை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தன்னுடைய உதட்டை மேலும் அழகாகும் முயற்சியில் அவர் ஈடுபட்ட நிலையில் லிப் பில்லர் எனப்படும் சிகிச்சையை பலமுறை எடுத்துள்ளார். இந்நிலையில் இது குறித்து குறிப்பிட்ட மருத்துவமனையின் மருத்துவ வருடம் ஆலோசனை செய்தார். அப்போது மருத்துவர் புதிய லிப் பில்லர் வந்துள்ளதாகவும் அதனை இலவசமாக தருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஜெசிக்கா மருத்துவமனைக்குச் சென்று இந்த சிகிச்சை செய்ய சம்மதித்தார். ஆனால் சில நிமிடங்களிலேயே அவருக்கு உதடு வீங்க தொடங்கியது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது தொடர்பாக மனவேதனை அடைந்து சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இலவசத்தை நம்பியதால் இப்படி பாதிப்பு ஏற்பட்டுள்ளது, உரிய மருந்துகள் எடுத்து வருவதால் இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக கூறியுள்ளார்.