
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை, மூத்த குடிமக்களுக்கு இலவச ஆன்மீக பயணத்தை அறிவித்துள்ளது. வருகின்ற புரட்டாசி மாதம், சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோவில்களுக்கு 100 பக்தர்களை அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளது.
60 முதல் 70 வயதுக்கு உட்பட்ட மூத்த குடிமக்கள் இந்த பயணத்தில் கலந்து கொள்ளலாம். இந்த ஆன்மீக பயணம் வரும் 21, 28 செப்டம்பர் மற்றும் 5, 12 அக்டோபர் ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த பயணத்தில் கலந்து கொள்ள விரும்புவோர், இந்து சமய அறநிலையத்துறையின் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வரும் 19 செப்டம்பர் க்குள் மண்டல அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.