பிரபல ஆரோக்கிய பால் நிறுவனம் புல் கிரீம் பால் விலையை குறைப்பதாக அறிவித்து. அதன்படி ஒரு லிட்டர் பால் விலை 4 ரூபாய் வரையில் குறைந்துள்ளது. ஒரு லிட்டர் பால் விலை 75 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 4 ரூபாய் குறைந்ததால் 71 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதம் 14 ஆம் தேதி ஆரோக்கிய பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 4 ரூபாய் வரையில் உயர்த்தியது. இதன் காரணமாக ஃபுல் கிரீம் பால் விற்பனை பாதித்தது. மேலும் இதன் காரணமாக தான் தற்போது விலையை குறைத்துள்ளது.