
மத்திய பிரதேசம் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் வயிற்றிலிருந்து இரண்டு அடி நீளம் உள்ள சுரைக்காய் ஒன்றை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த அவர் அறுவை சிகிச்சை மூலமாக காப்பாற்றப்பட்டார். சுரைக்காயில் கோம்பு இருந்ததால் மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அந்த இளைஞரின் பெருங்குடல் சுரைக்காயால் நசுக்கப்பட்டதாகவும் அந்த பொருள் ஆசனவாய் வழியாக அவரது உடலுக்குள் சென்றதாகவும் கூறியுள்ளனர்.