திருப்பரங்குன்றத்தில் கோர்ட் அனுமதி கொடுத்த பிறகு அங்கு போராடுனவர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்க முடியும் என்று அண்ணாமலை கேள்வியெழுப்பியுள்ளார்.

இரும்பு கரம் கொண்டு அடக்குவோம் என்று சீன் போட்டு சுற்றினீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்க முடியும் என்பது எங்களுக்கு தெரியும். அதேபோல நாங்கள் அடக்கி காட்டுவோம். அதுபோல் போக வேண்டாம் என்று நினைக்கிறேன்.  வாய்க்கு வந்ததெல்லாம் பேசினீர்கள் என்றால் உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் அதை செய்து காட்டுவோம். மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மரியாதை கொடுக்கிறோம்.

அந்த மரியாதையை தற்காத்துக் கொண்டு பேசிய வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும். இரும்புக்கரம் கொண்டு அடக்குவீர்களா? இவர்கள் எல்லாம் தப்பு செய்தவர்களா? பெண்கள் மீது கை வைத்தவர்களா? முருக பெருமானுக்காக பக்தர்களாக அங்கே திருப்பரங்குன்றத்தில் அந்த பகுதியில் கோர்ட் அனுமதி கொடுத்த பிறகு அங்கு போராடுனவர்களை எப்படி இரும்பு கரம் கொண்டு அடக்க முடியும்” என்று பேசியுள்ளார்.