ஒரு பெண் தனது கணவரை சாலையில் பொதுமக்கள் முன்னிலையில் சரமாரியாக அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த பெண், “இவன் சம்பாதிக்க மாட்டான், என் பணத்தில்தான் வாழ்றான்” என கூச்சலிட்டு, கணவரின் கழுத்தைப் பிடித்து பலமுறை அவனை அறைந்தார். கணவர் அமைதியாக நின்று தன்னைக் காப்பாற்ற முடியாமல் தவிக்கும் காட்சி, பார்வையாளர்களிடையே வருத்தத்தையும் கோபத்தையும் கிளப்பியுள்ளது.

 

“ஒரு மனிதன் சம்பாதிக்கவில்லை என்பதற்காக அவனை அடிப்பது சரியல்ல, பாசமான உறவுகள் மதிப்புக்குரியது, வன்முறை அல்ல” என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலரும், “ஒரு ஆண் அடிக்கிறபோது கேஸ் பண்ணுவோம், ஆனால் பெண் அடிக்கும்போது ஏன் அமைதி?” என கேட்டுள்ளனர். இந்த சம்பவம், பாலின வன்முறையை சரியானபடி பார்க்கும் சமூக மனநிலையை உருவாக்க வேண்டிய அவசியத்தை மீண்டும் வெளிச்சத்தில் கொண்டு வந்துள்ளது.