
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூறிவரும் நிலையில் தமிழக சட்டசபையில் யார் அந்த சார் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பினர். முதல் நாள் சட்டசபை கூட்டத்தொடரின் போது யார் அந்த சார் என்ற கேள்வி எழுப்பிய அதிமுகவினர் பேட்ஜ் அணிந்து வந்ததோடு பதாகைகள் இருந்து போராட்டம் நடத்தினர். இதற்கு இன்று முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதிலடி கொடுத்தார். அதாவது யார் அந்த சாராக இருப்பினும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உங்களிடம் ஆதாரம் இருந்தால் சிறப்பு புலனாய்வு குழுவிடம் கொடுங்கள் அவர்கள் உரிய விசாரணை நடத்துவார்கள் என்றும் கூறினார்.
இந்நிலையில் சென்னையில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் அந்த வழக்கில் சதீஷ் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு உடனடியாக இருந்ததாக கூறி அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் யார் அந்த சார் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பிய நிலையில் இவன்தான் அந்த சார் என்று தற்போது எக்ஸ் தளத்தில் ஒரு ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதாவது சிறுமி பலாத்கார வழக்கில் கைதான சுதாகர் என்பவர் தான் இந்த சார் என்று சுவரொட்டி அடித்து பல இடங்களில் கொடுத்துனர். மேலும் இந்த ஹேஷ்டேக் தற்போது எக்ஸ் தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டை உலுக்கிய #யார்_அந்த_SIR காவல் துறை விசாரணையில் அதிமுக வை சார்ந்தவர் #இவன்தான்_அந்தSIR என்று உறுதி ஆகி கைது செய்ய பட்டதை நோட்டீஸாக அடித்து பொது மக்களிடம் வழங்கினோம்.. pic.twitter.com/5cB1Bh1xQQ
— Jaya Kanagaraja (@Jayakanagaraja) January 8, 2025