விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நகைச்சுவை நடிகர் சிரிக்கோ உதயா. விஜய் டிவியில் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்று சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரபலங்கள் ஏராளம். இந்தத் தொடரில் சந்தானம், சுவாமிநாதன், ஜீவா, மாறன், பாலாஜி, மனோகர், ஜாங்கிரி மதுமிதா போன்ற எண்ணற்ற நடிகர்கள் பங்கேற்று இருந்தனர். அப்படி இந்த நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் உதய் என்கிற சிரிக்கோ உதயா.

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சந்தானம் படங்களுக்கு காமெடி வசனங்கள் எழுதிய இவருக்கு சர்க்கரை வியாதி இருந்த நிலையில் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக வலது கால் அகற்றப்பட்டுள்ளது. இந்த செய்தியை அறிந்த ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருவதோடு அவர் விரைவில் குணமடைய வேண்டி இறைவனை பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.