
உத்தரப்பிரதேசம் ஜாலோன் மாவட்டத்தில், சளி சிகிச்சைக்காக வந்த சுமார் ஐந்து வயது சிறுவனுக்கு சிகரெட் புகைக்குமாறு கூறிய மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குதாஉண்ட் மத்திய சுகாதார நிலையத்தில் பணியாற்றிய டாக்டர் சுரேஷ் சந்திரா, சிறுவனிடம் சிகரெட்டை வாயில் வைக்க சொல்லி, அதை தீயிட்டு புகைப்பதற்கும் கட்டளையிட்ட காட்சிகள் வீடியோவாக பதிவாகி சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
उत्तर प्रदेश के जिला जालौन में इलाज के लिए आए बच्चे को सरकारी डॉक्टर सुरेश चंद ने सिगरेट पिलाई !!
Video सामने आने पर डिप्टी CM ब्रजेश पाठक ने इस डॉक्टर पर FIR कराने का आदेश दिया। डॉक्टर को CHC से हटाया गया। pic.twitter.com/JyYoKJGmmi
— Sachin Gupta (@SachinGuptaUP) April 16, 2025
“>
இந்த வீடியோ வைரலாகியவுடன், பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதையடுத்து, மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நரேந்திர தேவ் சர்மா, சம்பவம் மார்ச் மாதம் நிகழ்ந்ததாக கூறி, மார்ச் 28ஆம் தேதியே விசாரணைக்கு உத்தரவு அளித்ததாகவும் தெரிவித்தார். தொடர்புடைய மருத்துவர் சுரேஷ் சந்திரா மாவட்டத் தலைமையகத்துக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த அதிகாரிகள், கூடுதல் சிஎம்ஓ டாக்டர் எஸ்.டி. சௌதரியின் தலைமையில் விசாரணை குழுவை அமைத்துள்ளனர். இது போன்ற செயல்கள் மாவட்டத்தில் ஒருபோதும் சகிக்கப்படாது என்றும், எதிர்காலத்தில் இந்த மாதிரியான தவறுகள் நிகழாத வகையில் கண்டிப்பான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் டாக்டர் சர்மா தெரிவித்தார். முழுமையான விசாரணை அறிக்கையை மாநில அரசிடம் விரைவில் சமர்ப்பிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.