இலங்கை நாட்டில் ஒரு தம்பதி வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இதில் மனைவி வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் கணவன் குழந்தையை பராமரித்து வருகிறார். இந்நிலையில் மனைவி வெளிநாட்டில் வேலை பார்க்கும் நிலையில் சம்பளத்தை கணவனுக்கு அனுப்பாமல் அவருடைய தாயாருக்கு அனுப்பியுள்ளார்.

இதனால்  கோபத்தில் கணவர் தான் பெற்ற மகனுக்கு சாப்பாடு கொடுக்காமல் சித்திரவதை செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வீடியோ எடுத்து தன் மனைவிக்கு அனுப்பி வைத்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவருடைய மனைவி அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். பின்னர் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்த சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.