
கேரளாவில் அரசு பேருந்து மட்டுமல்லாமல் ஏராளமான தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று கேரளாவில் தனியார் பேருந்து ஒன்றில் இளைஞர் ஒருவர் பயணம் செய்தார். அப்பொழுது அவர் டிக்கெட் வாங்குவதற்காக நடத்துனரின் அருகில் எந்தவித பிடிமானமும் இல்லாமல் நின்றுள்ளார். இருக்கை காலியாக இருந்தாலும் அவர் டிக்கெட் வாங்குவதற்காக படியின் நுனியில் நின்று கொண்டிருப்பது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
அடுத்த சில நிமிடத்தில் அவர் எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கதவு வழியாக கீழே விழப் போகிறார். உடனே அவரை அருகில் இருந்து நடத்துனர் அந்த படியை பார்க்காமலே அவரை பிடித்து பத்திரமாக அவரை மீண்டும் பேருந்துக்குள் இழுக்கிறார். இந்த சம்பவ ம் பேருந்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ பார்த்த இணையாவசிகள் அந்த நடத்துனரை ஸ்பைடர்மேன், சூப்பர் மேன்,. மின்னல் முரளி என்றும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்