
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் . கூலி தொழிலாளியான இவருடைய மனைவி குஞ்சு. இந்த நிலையில் ரவிச்சந்திரன் கர்நாடகாவிற்கு கூலி வேலைக்கு சென்று இருந்தார். அவர் நேற்று முன்தினம் மாலை ஆறு மணி அளவில் வீடு திரும்பிய போது வீட்டில் அவருடைய மனைவி இல்லாததால் அவருடைய வருகைக்காக காத்திருந்தார். நீண்ட நேரம் ஆகியும் மனைவி வராததால் அவர் கோபத்தில் இருந்துள்ளார் .
பின்னர் இரவில் மனைவி வீட்டுக்கு வந்த நிலையில் இவ்வளவு நேரம் எங்கே சென்றாய் ? என்று ரவிசந்திரன் கேட்டதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது. இதில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரவிச்சந்திரன் வீட்டில் இருந்த கட்டையை எடுத்து தன்னுடைய மனைவியின் தலையில் ஓங்கி அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சடலத்தை மீட்டு ரவிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . அதில் அவர் குடும்ப தகராறு காரணமாக குடிபோதையில் அடித்துக் கொன்றதாக கூறியுள்ளார்