
ஏர் இந்தியா இஸ்ரேலுக்கான விமான சேவையை இந்த மாதம் 14ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கு முன் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அதற்கான கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 31ஆம் தேதி வரை பயணம் செய்ய முன் பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பொருந்தும் என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.