மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான முதல் கட்ட சோதனை வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிஜேந்திர சிங் தெரிவித்துள்ளார். இஸ்ரோ நிறுவனம் ககன்யான் திட்டத்தை செயல்படுத்தும் முன்பு பல சோதனைகளை நடத்த உள்ளது

. இந்த திட்டத்தில் ஒரு பகுதியாக முதல் வாகன மேம்பாட்டு டிவி டி 1 ரக ராக்கெட் மூலம் ஆந்திர பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்டோபர் 21ஆம் தேதி சோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக வாகனம் முதல் ஏவுதளத்திற்கு கொண்டுவரப்பட்டது. இந்த சோதனையானது ராக்கெட்டை விண்வெளிக்கு செலுத்தி மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து வங்காள விரிகுடா கடலை அடைந்த பிறகு அதனை பத்திரமாக மீட்டெடுப்பதாகும்.