
குஜராத் மாநிலம் வதோதரா மாநகராட்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக குடியிருப்பு வாசிகள் போராட்டம் நடத்தி நடத்தியுள்ளனர் . மொத்தமாக 462 வீடுகளை உள்ளடக்கிய இந்த குடியிருப்பு.
இதில் இஸ்லாமிய பெண் ஒருவருக்கு வீடு கொடுப்பது குடியிருப்பு வாசிகளுக்கு பாதுகாப்பு குறைபாடு, தேவையற்ற தொல்லையையும் உண்டாக்கும் . எனவே அந்த பெண்ணுக்கு வேறு குடியிருப்பில் வீடு வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.