
கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகில் இருக்கும் பகுதியில் அவதியா என்ற மாணவி வசித்து வருகிறார். இந்த மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியின் சைக்கிள் கடந்த 21-ஆம் தேதி திருடு போனது. திருடன் சைக்கிள் திருடியதை சிசிடிவி காட்சிகள் மூலம் மாணவி கண்டறிந்தார். இதனால் சைக்கிள் திருடு போனது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் அவதியா கல்வி அமைச்சர் சிவன் குட்டிக்கும் தனது சைக்கிள் திருடு போனது குறித்து இமெயில் வாயிலாக புகார் அளித்துள்ளார்.
அந்த இமெயிலை பார்த்த கல்வித்துறை அமைச்சர் மாணவி அவதியாவை தொடர்பு கொண்டு கூறுகையில், கல்வி அமைச்சர் தனது புகாருக்கு பதில் அளிப்பார் என்பதை சற்றும் கூட எதிர்பார்க்கவில்லை என்றும், அவர் இரண்டு நாட்களுக்கு பின்னர் தன்னை தொடர்பு கொண்டு திருடு போன சைக்கிள் குறித்து விசாரித்தார் எனவும், மேலும் அமைச்சர் தனக்கு புதிய சைக்கிள் ஒன்றை பரிசளித்ததாகவும் மாணவி மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.