
ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த 19ஆம் தேதி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்தார். இந்த விபத்தில் வெளியுறவுத்துறை மந்திரி உசைன் அமீர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என பலர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் அதிபர் உட்பட 9 பேர் உயிரிழந்த நிலையில் நாட்டில் 5 நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் ஈரான் அதிபரின் இறுதி ஊர்வலம் நேற்று நடைபெற்றது.
இதேபோன்று மற்றவர்களுக்கும் இறுதி ஊர்வலம் நடைபெற்ற நிலையில் மத சடங்குகள் முடிவடைந்ததும் ஈரான் நாட்டின் கொடி மற்றும் சவப்பெட்டிகளில் இறந்தவர்களின் புகைப்படங்கள் போன்றவைகள் வைக்கப்பட்டு ஊர்வலம் தொடங்கியது. இந்த இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். அதன்படி ஈரான் அதிபரின் உடல் மக்கள் வெள்ளத்தில் மிதந்து ஆசாதி சதுக்கத்தை சென்றடைந்தது. மேலும் இந்த இறுதிச் சடங்கில் வெளிநாட்டு தலைவர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் இந்தியா சார்பில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்.