ஈரான் நாட்டின் அதிபர் இப்ராகிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் அர்பைஜான் அருகே சென்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என அனைவரும் உயிரிழந்தனர்.

தற்போது உயிரிழந்த அதிபரின் உடல் உட்பட அனைவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஈரான் நாட்டின் அரசியல் சாசனப்படி 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் தற்போது துணை அதிபராக பணியாற்றி வந்த முகமது முக்பர் தற்போது ஈரான் நாட்டின் அதிபராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன்படி முகமது முக்பர் விரைவில் அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார்.