
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்தவகையில் பெரிய அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார் ஒரு சுயேட்சை வேட்பாளர்.
டிஜிட்டல் முறையில் வேட்பாளர்கள் வீட்டுக்குள்ளே செல்ல வசதியாக வீடியோ மூலம் பிரச்சாரம் செய்து வருகிறார். இதற்காக வெறும் 2 ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இளைஞர்கள் அரசியலுக்கு அதிகம் வரவேண்டும் என்பதற்காகவே தான் அரசியலில் நிற்பதாக கோரியுள்ளார்.