வருகிற பிப்ரவரி 27-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நேற்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு அ.தி.மு.க-வினர் வானவேடிக்கையோடு வரவேற்பு அளித்துள்ளனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக வெடிக்கப்பட்ட வானவேடிக்கை பட்டாசால் தென்னை மரம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.