கள்ளக்குறிச்சி மாவட்டம் சிறு நாவலூர் பகுதியில் மணிராஜா (24) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன்பாக ராஜேஸ்வரி (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ராதிகா (3) மற்றும் லாவண்யா என்ற இரு பெண் குழந்தைகள் இருக்கிறது.

இதில் லாவண்யாவுக்கு 5 மாதங்கள் ஆகிறது. இதில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் ராஜேஸ்வரி கடந்த 4 மாதங்களுக்கு முன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். அவருடைய தாய் வீடு வடலூரில் இருக்கிறது.

இந்நிலையில் கடைவீதி பகுதியில் வைத்து தன்னுடைய 5 மாத குழந்தையை கணவர் கடத்தி சென்று விட்டதாக ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் தற்போது புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் குழந்தையை கொலை செய்து கால்வாயில் வீசியதாக கூறினார்.

மேலும் இதைத்தொடர்ந்து கால்வாயில் இருந்து குழந்தையின் சடலத்தை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரியை அவர்கள் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.