
இந்த உலகில் ரூபாய் நோட்டு என்பது மிக முக்கியமான ஒன்று. பணம் இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அப்படி நாம் சில நேரங்களில் வாங்கும் பணம் கிழிந்து அல்லது சேதம் அடைந்த ரூபாய் நோட்டாக இருக்கும். பழைய மற்றும் கிழிந்த, சேதம் அடைந்த நோட்டுக்கள், சேதமடைந்த நாணயங்கள் மக்களின் கைக்கு வரும்போது அவற்றை மாற்றுவதில் சிரமம் ஏற்படுகின்றது. உங்கள் கையில் கிழிந்த பணம் வைத்திருந்தால் அதனை வங்கி கவுண்டர்களில் கொடுத்து ரொக்கமாக மாற்றிக் கொள்ளலாம். பெரும்பாலான நமது வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைத்து விடுவார்கள்.
இதனை Multilated notes என்பார்கள். ஒரு நோட்டு இரண்டுக்கும் மேற்பட்ட துண்டுகளாக இருந்தாலும் அல்லது அதன் ஒரு பகுதி மிஸ் ஆகி இருந்தாலோ அது சிதைந்த நோட்டுகள் என்று அழைக்கப்படும். இதையும் நாம் வங்கிகளில் கொடுத்து எளிதில் மாற்றிக் கொள்ளலாம். ஒருவர் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை மாற்றிக் கொள்ள முடியும்.