
பஞ்சாப் நேஷனல் வங்கி புதிய விதிமுறையை இன்று முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். முன்னணி பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதால் இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும். ஏடிஎம்மில் சென்று பணம் எடுக்க நினைப்பவர்கள் வங்கி கணக்கில் பணம் இருக்கிறதா இல்லையா என்று ஒரு முறைக்கு இருமுறை சரிபார்க்க வேண்டும். ஏடிஎம் மையத்திற்கு சென்று வங்கி பேலன்ஸ் சரிபார்க்காமல் பணம் எடுக்க முடிவு செய்ய வேண்டாம்.
வங்கி கணக்கில் போதுமான பணம் இல்லாத நிலையில் ஏடிஎம் இல் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்தால் அக்கவுண்டில் குறைந்த பேலன்ஸ் காரணமாக பரிவர்த்தனை தோல்வியடையும். அப்படியானால் வங்கி உங்களுக்கு பத்து ரூபாயும் அதனுடன் ஜி எஸ் டி யும் சேர்த்து அபராதம் விதிக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. அதனைப் போலவே இ வாலெட் வழியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வோம் கட்டாயமாக கேஒய்சி முடித்திருக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் இ வாலட் வழியாக முதலீடு செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.