
இந்தியாவில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வீடுகள் வழங்கப்படுகிறது. டிஜிட்டல் தளத்தில் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆவாஸ் பிளஸ் மொபைல் ஆப் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தில் தகுதியான குடும்பங்களின் பெயர்கள் நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சியில் செயலாளர் அல்லது வேலை வாய்ப்பு உதவியாளர் மூலமாக கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றது. இந்த திட்டத்தில் தாழ்த்தப்பட்ட ஜாதி அல்லது பழங்குடியினத்தை சேர்ந்த வீடுகள் இல்லாத குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
கிராமப்புறங்களில் வீடு இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடுகள் வழங்குவது தான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதற்கு பயனாளி தன்னுடைய ஃபோனில் ஆவாஸ் பிளஸ் 2024 சர்வே மற்றும் ஆதார் பேஸ் ஐடி செயலியை நிறுவ வேண்டும். ஒரு செல்போனில் இருந்து ஒரு கணக்கெடுப்பு மட்டுமே நடத்த முடியும். விண்ணப்பத்திற்கு ஆதார் எண் பயன்படுத்துவது கட்டாயமாகும். இந்த டிஜிட்டல் முன் முயற்சி திட்டத்தை மிகவும் வெளிப்படையானதாக அணுகக் கூடியதாக அரசு மாற்றி உள்ளது. இதன் மூலம் கிராமப்புற பயனாளிகள் தங்கள் வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்கலாம்.
வீடு இல்லாதவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். மூன்று சக்கர வாகனங்கள் அல்லது நான்கு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பயனடைய தகுதியற்றவர்கள். அதே சமயம் விவசாயியின் கிசான் கிரெடிட் கார்டு வரம்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருந்தால் அவர் இந்த திட்டத்தின் பலனை பெற முடியாது. குடும்பத்தில் யாராவது ஒருவர் அரசு வேலையில் இருந்தால் அல்லது வருமான வரி அல்லது வணிகவரி செலுத்தினால் அவரும் இந்த திட்டத்தில் பயன்பெற தகுதியற்றவர். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு தங்கும் இடம் வசதி வழங்குவது தான். இந்த திட்டத்தில் நீங்களும் பயன்பெற விரும்பினால் உடனே அப்ளை பண்ணுங்க.