
நார்வே செஸ் தொடரில் இந்திய வீரர் பிரெக்ஞானந்தா மற்றும் அவருடைய அக்கா வைஷாலி ஆகியோர் சிறப்பான முறையில் விளையாடி வருகிறார்கள். இந்த செஸ் தொடரில் உலகின் நம்பர் 1 வீரரான மாக்னஸ் கால்சனை பிரத்தியானந்தா பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இதேபோன்று உலக செஸ் தர வரிசையில் 2-வது இடத்தில் உள்ள பாபியோனாவையும் அவர் வீழ்த்தியுள்ளார்.
இவர் தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள வீரர்களை வீழ்த்தியதன் மூலம் செஸ் தர வரிசையில் முதல் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் செஸ் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்து ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்களை வீழ்த்துவது சிறப்பான சாதனையாகும். தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் நுழைந்த பிரக்ஞானந்தாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் உங்களுடைய திறமையை கண்டு உலகமே வியக்கிறது என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.