ரயில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை பெறுவது கடினமான ஒன்று. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டை பெற்று இருந்தாலும் சில பயணிகள் ஒருசில காரணத்திற்காக தங்களது பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போய் விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டை வைத்து இருந்தும் பயணம் மேற்கொள்ள முடியாமல் இருக்கும் பயணிகள் தங்கள் டிக்கெட்டை அவரது குடும்ப உறுப்பினருக்கு மாற்றுவதற்கான விருப்பம் இருக்கிறது.

இதை செய்வதன் வாயிலாக டிக்கெட்டுக்காக செலவழித்த பணத்தை நீங்கள் மிச்சப்படுத்தலாம். ரயில் டிக்கெட்டை மாற்றுவதற்குரிய வழிமுறைகள் பற்றி நாம் தற்போது தெரிந்துக்கொள்வோம். டிக்கெட்டை பிரிண்ட்அவு எடுக்கவும். நீங்கள் டிக்கெட்டை மாற்ற விரும்பும் நபரின் ஆதார் கார்டை (அ) வாக்காளர் அடையாள அட்டையை எடுத்து போகவேண்டும். உங்களது அருகே ரயில் நிலையத்திலுள்ள முன் பதிவு கவுண்டருக்கு செல்லவும்.

பின் டிக்கெட் பரிமாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்திய ரயில்வேயின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், ரயில் டிக்கெட்டுக்கான பரிமாற்ற கோரிக்கையை அனுப்புவதற்கான காலக்கெடு சூழ்நிலைகள் மற்றும் சம்பந்தப்பட்ட பயணிகளின் அடிப்படையில் மாறுபடலாம். அரசு ஊழியர்களுக்கு ரயில் புறப்படுவதற்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு முன் கோரிக்கையை அனுப்பவேண்டியது கட்டாயம் ஆகும்.

பண்டிகைகள், திருமண விழாக்கள் (அ) வேறு நிகழ்வுகளுக்கு ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்துக்கு முன் தனி நபர்கள் டிக்கெட் பரிமாற்ற கோரிக்கையை அனுப்பவேண்டும். இதுதவிர்த்து என்சிசி விண்ணப்பதாரர்கள் டிக்கெட் பரிமாற்ற சேவை மற்றும் அதனுடன் தொடர்புடைய பலன்களை பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவர்.